8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும்"96".., ரசிகர்கள் உற்சாகம்
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற "96" திரைப்படம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மீண்டும் திரைக்கு வரும் "96"
சமீபகாலமாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது "96" படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி "96" திரைப்படம் வெளியானது.
கோவிந்த் வசந்தா இசையமைத்த, இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் காதலின் அழகையும், பிரிவின் வலியையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 9ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.