விஜய்யை ஆதரித்த சனம் செட்டியே... இப்போ இப்படி சொல்லிடாங்களே!
நடிகர் விஜய்க்கு இதுவரை ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த சனம் செட்டி தற்போது விஜய் பற்றி விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

விஜய் சங்கீதா விவாகரத்து
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த விடயம் கடந்த மாதம் 27ம் திகதி வெளியாகி இருந்தது.
சங்கீதா மனு தாக்கல் செய்யும் போது விஜய் மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்து இருந்தார். இதனால் சமூக வலைத்தள பக்கத்தில் இது பெரும் பேசுபொருளாக மாறியது.
இதன் பின்னர் சில நாட்களுக்கு முன்னர் நீலாங்கரை வீட்டில் உரிமை வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்.

விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும். விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது இதை கேட்டால் விஜய் மிரட்டுகிறார் என்றும் சொல்லி இருந்தார்.
இதன் பின்னர் நேற்று மகளிர் தின விழாவில் மதன் முதலாக விவாகரத்து சர்ச்சை குறித்து பேசிய போது அத ஒர்த் இல்லை என்று பேசி இருந்தார்.
இதற்கு பெண்கள் கோபமடைந்து நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பேசிய சனம் செட்டி கூட விஜய் பேசியதற்கு விமர்சித்து உள்ளார்.

சனம் செட்டி விமர்சனம்
நேற்று மகளிர் தினத்தில் விஜயின் பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகிகள் கை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியாக இருந்தனர். இதற்கு சனம் செட்டி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னது?? WORTH ஏ இல்லியா ??? இதற்கு பெண்கள் கைதட்டி உற்சாகம் அடைகின்றனர்" என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக விஜய்யை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வந்த சனம் செட்டி தற்போது விமர்சித்து போட்ட பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |