முடிவுக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில், நடிகர் விஜய் மீதான நீதிபதிகள் கருத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நீதிபதியின் இந்த விமர்சனத்தால் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தனிநீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சமூக நீதிக்காக பாடுபடும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல. நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்ப என்றும் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
அவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் விஜய் மீதான எதிர்மறை கருத்துக்களையும் நீதிமன்றம் நீக்குவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.