நடிகர் விஜயின் புதிய தொழில் என்ன தெரியுமா? கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தளபதி
தளபதி விஜய் புதிதாக ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு திட்டம் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சினிமாவிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
அதையும் தாண்டி சொந்தமாக நிறைய மண்டபங்கள் வைத்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் ஷோபனா மண்டபம், வடபழனியில் ஒரு மண்டபம், போரூரில் சங்கீதா மண்டபம், புதுக்கோட்டையில் ஒன்று என நிறைய மண்டபங்கள் நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத ரூ. 8 லட்சத்துக்கு வாடகை விட்டுள்ளார்.
இப்போது மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகை விடப்போவதாக தெரிகிறது. விரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்கின்றனர்.
இதேவேளை, நடிகர் விஜய் தற்போது வாரிசு படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார். இதனை முடித்த பிறகு வியாபார வேலைகளிலும் நேரத்தினை செலவு செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.