நடிகர் நெப்போலியனை மட்டுமல்ல... ராதாரவியையும் அசிங்கப்படுத்தினாரா விஜய்?
அண்மையில் கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பின்னர் நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜய் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் அதிகரித்து வருகின்றது.
குறித்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்றுவரையில் இவர் நேரில் சென்று சந்திக்காததும் இணையத்தள வாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
சமீப காலமாகவே விஜய்யின் இமேஜுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது. இது ஒரு புறம் இருக்க, திரைத்துறையிலும் அவர் சீனியர் நடிகர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார்; தலைக்கனம் பிடித்தவர் என்ற விமர்சனங்களும் இன்னொரு புறம் வைரலாகி வருகின்றது.
நெப்போலியன் - விஜய் சர்ச்சை
போக்கிரி படப்பின் போது, கேரவனில் இருந்த விஜய்யை தனது நண்பர்களுடன் சந்திக்க சென்ற நெப்போலியனை விஜய் கடுமையாக பேசி அசிங்கப்படுத்தியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது.அதனை நெப்போலியனும் சில பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி விஜய் குறித்து பேசிய பழைய காணொளியொன்றும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
ராதாரவி பேட்டி
பிரபல சேனலுக்கு ராதாரவி அளித்த பேட்டியில், "சர்கார் படத்தில் நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம். அதற்கு முன்னதாகவே எனது பேரன் விஜய்யின் தீவிரமான ரசிகன்.
எப்படியாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். ஷூட்டிங்கின்போது இதுகுறித்து அவரது பி.ஏவிடம் சொன்னேன். ஆனால் விஜய் மேக்கப்பில் இருக்கும்போது ஃபோட்டோ எடுக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார்.
என்ன மேக்கப்போ தெரியல.. பின்னர் ஒருநாள் குடும்பத்தோடு சென்று விஜய் வீட்டில் ஃபோட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.
சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் குறைந்த ரத்த அழுத்தம் வந்து மயங்கி விழுந்துவிட்டேன். விஜய் உள்ளிட்டோர் என்னை வந்து தூக்கிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து அதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கலாம் என நினைத்து அவரது பி.ஏ.விடம் கூறினேன்.
அதற்கு அவர், 'சரி சார். விஜய் சார் வர சொல்லிவிட்டார். ஆனால் அன்று போல் கூட்டத்தை கூட்டி வர வேண்டாம் என கூறுகிறர்" என்றார். நான் உடனே, 'இல்லை நான் வரவில்லை' என சொல்லி வைத்துவிட்டேன்.
என் குடும்பத்தைத்தான் அவர் கூட்டம் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் அது கூட்டமாக இருக்கலாம்.எனக்கு அது என்னுடைய குடும்பம்" என குறிப்பிட்டிருப்பார்.
குறித்த விடயம் கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பின்னர் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |