Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?
லோக்கல் தியேட்டரில் படம் பார்க்க சென்று ரசிகர்களிடம் விஜய் மாட்டிய சம்பவம் காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.
“பூவே உனக்காக” என்ற படத்தின் மூலம் விஜய்யின் நல்ல நேரம் ஆரம்பமானது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் பெண்கள், குழந்தைகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் என்றாலே கட்டாயம் 200 கோடி வசூலை கடக்கும் என்ற நிலையே வந்துவிட்டது. இதனால் “வசூல் கிங்” எனவும் அழைப்படுகிறார்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்து கோட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
லோக்கல் தியேட்டரில் விஜய்
இந்த நிலையில், வைபவ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், “ ஒருமுறை விஜய்யுடன் படம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். சலார் படத்துக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். எனக்கு அந்த டிக்கெட்டை அனுப்பினார்கள். அதில் பால்கனி இல்லாமல் கீழே டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.
அதனைப் பார்த்த நான் டிக்கெட்டை தப்பா புக் செஞ்சிருக்கீங்களா? கீழே இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர்களோ ரசிகர்களோடு ரசிகராக விஜய் சார் இப்படித்தான் படம் பார்ப்பார். பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு லோக்கல் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம்..” என கூறினார்.
இந்த பேட்டியை தொடர்ந்து லோக்கல் தியேட்டர் ஒன்றில் விஜய் முகத்தில் மாஸ்க் போட்ட படி அமர்ந்திருக்கம் காணொளியொன்று வைரலாகி வருகின்றது.
காணொளியை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜயின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Thalapathy @actorvijay watched #Salaar in Gokul theatre , Hyderabad ??#Prabhas #ThalapathyVijay
— Suresh PRO (@SureshPRO_) September 1, 2024
pic.twitter.com/X9FanbPKkC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |