தவெக விஜய்யின் வெற்றி... கண்கலங்கி பிரபல நடிகர் வெளியிட்ட காணொளி
நடிகர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்யின் நண்பர்களும், நடிகருமான சஞ்சீவ், ஸ்ரீமன் இருவரும் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
விஜய்யின் வெற்றி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் வெற்றி பெற்ற நிலையில், பலரும் இந்த வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பாக பேசப்படுகின்றது.
அதாவது விஜய்யின் வெற்றியை நினைத்து நடிகரும், நண்பருமான ஸ்ரீமன் கண்கலங்கி காணொளியினை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போன்று சஞ்சீவ் தனது மனைவியுடன் இணைந்து வீட்டு முன்பு சரவெடியை வெடித்து விஜய்யின் வெற்றியினை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |