விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

ரசிகை பரபரப்பு கருத்து
விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.
இந்நிலையில்,தளபதி விஜயின் ரசிகையொருவர் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்து காரசாரமாக பேசிய காணொளியை, சினிமா விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த பெண் அதில் குறிப்பிடுகையில், தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் - புரட்சி மங்கை அதிரடி.
— Blue Sattai Maran (@tamiltalkies) February 28, 2026
'தவெக கூட்டத்தில்..பெத்த புள்ளை செத்தாலும் பரவாயில்லை' எனக்கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சி இது.
இன்னும் பல கேவலங்களை நாம் கேட்கப்போவது உறுதி.pic.twitter.com/x5JtErbSXs
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |