கணவன் மனைவி பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே! படுவைரலாகும் காணொளி
மக்களின் மனம் கவர்ந்த விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கும் Happy Wife Happy Life... என்ற புதிய நிகழ்சி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி காணொளியுடன் இன்று வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சி என்றால் ரியாலிட்டி ஷோ தான் பிரபல்யம். விதவிதமான புதிய கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதால், ரியாலிட்டி ஷோ என்றாலே விஜய் தொலைக்காட்சி தான் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

நடனநிகழ்ச்சி, பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் புதிய பரிமாணத்துடன் பல்வேறு நிழகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை குஷியாக்கி வரும் விஜய் தொலைக்காட்சியில்,தற்போது பிரியங்கா தொகுத்து வழங்க wife-ah பாரு.. Life-ey ஜோரு.. Happy Wife Happy Life.. எனும் புதிய நிகழ்ச்சி மார்ச் 8 முதல் ஞாயிறுதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

குறித்த அறிவிப்பு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆண்கள் மீது பெண்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை Cupid-டிடம் சொல்ல அதை எல்லாம் பிரியங்கா மற்றும் cupid பஞ்சாயத்து செய்ய போகிறார்கள் என்பது போல் ஒரு காணொளி வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |