ராஷ்மிகாவிற்கு விஜய் தேவரகொண்டா அம்மா போட்ட கன்டிஷன்... ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்
நடிகை ராஷ்மிகாவிற்கு மாமியார் போட்ட கண்டிஷன் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து காம்ரேட் படத்திலும் இருவரும் சேர்ந்த நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்றைய தினம் இவர்களின் திருமணம் உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
குறித்த தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் ஆக்கிரமித்து வரும் நிலையில், ராஷ்மிகாவின் மாமியார் அதாவது விஜய் தேவரகொண்டாவின் தாயார் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த காணொளியில் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு அவர் போட்ட கண்டிஷனை, ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
குறித்த தம்பதிகளின் வரவேற்பு நிகழ்ச்சியானது மார்ச் மாதம் 4ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மருமகள் எப்படி இருக்க வேண்டும்?
விஜய் தேவரகொண்டாவின் தாய், மகனை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியு்ளளார்.
ஜாதி, மதம் என எந்தவொரு எதிர்ப்பும் நாங்கள் கூறுவதில்லை. விஜய்யை நன்றாக புரிந்து கொண்டு, முழு மனதுடன் அவனை நேசித்து நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண் மருமகளாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு, எந்தவொரு கவலையும் கொள்ள வேண்டாம். உங்களது மகனுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக வந்துள்ளார். நீங்கள் பூரிப்படையும் அளவிற்கு உங்களை மகனை பார்த்துக் கொள்வார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |