ஹேட்டர்ஸ்களுக்கு ஒரே பதிவில் பதிலடி கொடுத்த விஜய் தேவரகொண்டா! படுவைரலாகும் வீடியோ
ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும், பாலிவுட்டின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதன்போது, விஜய் தேவரகொண்டாவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஷ்மிகா சுமார் 100 முறை கேட்டதாகக் கூறப்பட்ட கருத்து இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இந்தக் கருத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவின் அணுகுமுறை ஆண் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகச் சிலர் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் பதிவு
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றையும், அவரைத் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வலம் வரும் வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள அவர், ராஷ்மிகாவைத் தனது சிறந்த தோழியாகவும், வாழ்க்கைத் துணையாகவும் வர்ணித்துள்ளார்.
மேலும், “எனது சிறந்த தோழி, என் மனைவி, என்னவள். என் வாழ்க்கையில் நான் செய்த மிக அழகான விஷயங்களில் ஒன்று எங்கள் உறவு. நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், “நானும் அவளும் உலகத்தையே எதிர்த்து நிற்க வேண்டியிருந்தாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்ற கருத்தின் மூலம், தங்களது உறவின் மீதான உறுதியையும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவதுடன், தம்பதியினரை விமர்சித்தவர்களுக்கு அவர் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |