நவம்பர் மாத கிரக மாற்றங்கள்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய டாப் 3 ராசிகள்!
அக்டோபர் மாதம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், நவம்பர் மாதம் ஜோதிட ரீதியாக சில முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இவை சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையும், சிலருக்குச் சவால்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் அனுபவிக்க, மற்றவர்கள் நிதி நெருக்கடி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

அந்த வகையில், நவம்பர் மாதத்தில் அதிக சவால்களையும் துரதிர்ஷ்டத்தையும் சந்திக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி நவம்பர் மாத கிரகபெயர்ச்சிகளால் வாழ்க்கையில் பல வழிகளிலும் பாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பண விஷயங்களிலும், நீண்ட தூரப் பயணங்களிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.இல்லாவிடில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள இதிக வாய்ப்புள்ளது.
தைரியம் அதிகரித்தாலும், காரியங்களை முடிக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முன்னேற்ற வாய்ப்புகள் குறைவதுடன், தேவையற்ற அலைச்சலும் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு மந்தமான சூழல் காணப்படும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சவாலானதாக அமையலாம். புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
உடல்நலத்தில் கவனம் செலுத்துவதுடன், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் உருவாகலாம். பயணங்களின்போது விபத்து அல்லது இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தடைகளும் சவால்களும் நிறைந்ததாக இருக்கும். பணிச்சுமை மற்றும் வேலை அழுத்தம் அதிகரித்து மன அழுத்தமும் சோர்வும் ஏற்படும்.
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நிதிநிலையைத் திட்டமிட்டுச் சீராக நிர்வகிக்க வேண்டும். ஈகோ காரணமாக உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டியாளர்களால் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்களுடனும் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். எனவே, மோதல்களையும் தவறான புரிதல்களையும் தவிர்க்கப் பொறுமையுடனும் பணிவுடனும் செயல்படுவது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |