அனிருத் - காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் : பேசுபொருளாகும் சொத்து மதிப்பு தகவல்!
தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளராகத் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள அனிருத், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், அனிருத்தின் இசைப் பயணத்தைத் தாண்டி, தற்போது அவரது திருமணம் குறித்த தகவல்களே தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றது.
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறனுடன் அனிருத் திருமணம் செய்துகொள்ளப் போகும் தகவல் வெளியானதில் இருந்தே இவர்களின் திருமணம் குறித்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவர்களது திருமணம் வரும் நவம்பர் 11ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திருமண நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனிருத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

திருமணச் செய்திகளுக்கு மத்தியில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.
ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத் சுமார் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. திரைப்பட இசையைத் தாண்டி, இசைக் கச்சேரிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் அவர் வருமானம் ஈட்டி வருகிறார்.
இவற்றின் அடிப்படையில், அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.50 தொடக்கம் 60 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

காவ்யா மாறனின் சொத்து மதிப்பு
மறுபுறம், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனும் பெரும் செல்வாக்கும் சொத்துப் பின்னணியும் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தொடர்புடைய அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1,331 கோடி வரை இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |