என்னை விஜய்தேவரகொண்டா இழிவுப்படுத்துகிறார் - பிரபல நடிகை குற்றச்சாட்டு!
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மீது புஷ்பா பட நடிகை அனசியா பரத்வாஜ் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
விஜய்தேவரகொண்டா மீது நடிகை குற்றச்சாட்டு
தெலுங்கு சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஆண் ரசிகர்களை விட, பெண்கள் ரசிகைகள்தான் அதிகம். இவர் அதிக கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வதும் உண்டு.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா மீது பிரபல நடிகை அனசியா பரத்வாஜ் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் சிலர் என்னை இழிவுப்படுத்துகிறார்கள். சமீபத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா மோசமான வசத்தைப் பேசியிருந்தார். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் இதுவும் ஒன்று என்று நான் அந்தப் படத்தை விமர்சனம் செய்திருக்கிறேன்.
இதனால், மறைமுகமாக விஜய் தேவரகொண்டா அவரது ரசிகர்களுக்கு பணம் கொடுத்து சமூகவலைத்தளங்களில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேச வைத்து வருகிறார்.
மேலும், நான் தியேட்டருக்கு சென்றபோது, அந்த வசனத்தை சத்தமாக கூறும்படி விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் கூறினார். இதெல்லாம் விஜய் தேவரகொண்டா தெரியாதமாதிரி இருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.