காதலியின் கையைப் பிடித்து காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா: இவர் தானா அது...
நடிகர் விஜய் தேவரகொண்டா காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
விஜய் தேவரகொண்டா
2கே ஹிட்ஸ்களின் கனவு காதலனாக வலம் வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கு சினிமாவில் பயணத்தை ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமா வரைக்கும் பிரபலமாகி இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம், டாக்ஸி வாளா போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், நோட்டா, டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் தமிழிலும் வெளியாகிருந்தது.
தற்போது நடிகை சமந்தாவோடு குஷி திரைபபடத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் செப்டெம்பர் முதலாம் திகதி வெளியாக இருக்கிறது.
காதலியுடன் புகைப்படம்
இந்நிலையில், குஷி திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் காதலித்து வருகிறார்கள் என்று பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் தன் காதலியின் கையைப் பிடித்துக் கொண்டு "உண்மையிலே இது ஸ்பெஷலானது விரைவில் அறிவிக்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவைப் பார்த்த இணையத்தள வாசிகள் விஜய்தேவரகொண்டாவின் காதலி சமந்தாவா அல்லது ராஷ்மிகா மந்தனாவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |