விட்டுச் சென்ற மூத்தமகள்... முகத்தில் மாறாத சோகம்! இளைய மகளுடன் விஜய் ஆண்டனி!
நடிகர் விஜய் ஆண்டனி தனது மகள் மீரா இறந்த பின்பு தற்போது இரண்டாவது மகளுடன் முதன்முறையாக வெளியுலகிற்கு வந்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சற்று மன அழுத்தத்தில் இருந்த இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் இறப்பு குறித்து முதன்முதலாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பொறாமை, பணம், வலி, வறுமை, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். `அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.' - நடிகர் விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்புப் பற்றி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இளைய மகளுடன் விஜய் ஆண்டனி
மூத்த மகளின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளிவரும் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் தனது இளைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார்.
மகள் இறந்த ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனி தனது வேலையை பார்க்க ஆரம்பித்ததுடன், தன்னுடன் தனது இளைய மகளையும் அழைத்து வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் ஆண்டனியை பாராட்டியும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |