விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி! மூச்சுவிடவே சிரமப்படும் சோகம்
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த நடிகர் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து பிரபல தயாரிப்பாளர் தகவல் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரபல படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து கூறுகையில், விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி விரைவாக சிகிச்சை பெற்று விரைவாக மீண்டு வருகின்றார்.
மலேசியாவில் லங்காவி தீவிற்கு வந்து அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து பார்த்துக் கொள்வதாகவும், விரைவில் சென்னை அழைத்து வருவதற்கு ஆலோசனை எடுப்பார்கள் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.