விஜய் மற்றும் தோனியின் திடீர் சந்திப்பு: புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் செய்த காரியம்
நேற்றைய தினத்தில் நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.
விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் தருவாயில் இருந்து வருகின்றது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே, ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வரும் நிலையில், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடித்துள்ளார்.
இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால், பீஸ்ட் படத்தின் தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தோனி - விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதில், தோனி - விஜய் அருகருகே இருக்கும் படத்தை வைத்து, தோனி படத்தின் அருகே "PM" என்றும், விஜய் படத்தின் அருகே "CM" என்றும், "ஆளப்போகும் மன்னர்கள்" எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
குறித்த போஸ்டர் தற்போது கேலியை ஏற்படுத்தினாலும், சிறிது சலசலப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.