பிறந்தது கார்த்திகை மாதம்: அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் ராசி யார்?
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான மாதமாக பார்க்கப்படும் கார்த்திகை மாதத்தில் பேரதிர்ஷ்டத்தினை பெறும் சில ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
நவ கிரகங்களின் ராஜாக காணப்படும் சூரியன் நேற்றைய தினம் துலாமிலிருந்து விருச்சிகத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
விருச்சிக ராசியில் குடிபெயரும் சூரியன், தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் பிறப்பிற்கு வழிவகுக்கின்றார்.

மாதம் ஒருமுறை தனது ராசியினை மாற்றும் சூரியனின் நிகழ்வானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இதனால் சில ராசியினருக்கு சிறப்பு யோகங்கள் மட்டுமின்றி தனித்துவமான பலன்களும் கிடைக்கும்.
அந்த வகையில் சூரியன் ஏற்கனவே குடியிருக்கும் செவ்வாய், புதன் கிரகங்களுடன் இணைந்துள்ளது திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது.
சூரிய பெயர்ச்சியின் இந்த கிரகநிலை மாற்றங்கள் எந்தெந்த ராசியினரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
சூரியனின் இந்த நிலையினால் ரிஷப ராசியினர் ஜாதகத்தில் 7வது இடத்தில் மாற்றம் நிகழ்கின்றது.
இந்த மாற்றத்தினால் தொழிலில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.
தொழிலில் காணப்படும் நீண்ட பிரச்சனை முடிவுக்கு வருவதுடன், எதிர்பார்த்த வெற்றி மற்றும் ஆதாயம் கிடைக்கும்.
வீடு கட்டுதல், வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறுவதுடன், கடன்சுமையும் தீரும். நீங்கள் தற்போது செய்யும் முதலீடு பல மடங்காக லாபத்தை அளிக்கும்.


கடகம்
சூரிய பெயர்ச்சியின் மாற்றமானது கடக ராசியினரின் ஜாதகத்தில் 5வது வீட்டில் மாற்றம் ஏற்படுகின்றது.
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுப்படுத்தவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சிக்காக பல பயணங்களையும் மேற்கொண்டு, புதிய ஒப்பந்தங்களை முடிக்கவும் செய்வீர்கள்.
குடும்பத்தினர், உறவினரின் ஆதாரவு தொழிலை அடுத்த கட்டத்தில் எடுத்துச் செல்லும். உங்களது உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்
சிம்ம ராசியினை ஆளும் கிரகமான சூரியனின் தற்போதைய பெயர்ச்சி ஜாகத்தில் 4வது வீட்டில் மாற்றத்தினை கொண்டுவரும்.
நிதி நிலைமை மேம்படுவதுடன், ஆடம்பர தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் நிகழ்வதுடன் அதிகமான வருமானத்தையும் பெறலாம்.
உங்களது எதிர்காலத்தின் தேவைக்காக சேமிப்பு திட்டங்கள், காப்பீடு திட்டங்களிலும் கவனம் செலுத்தீவர்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பினை பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் முதல் வீட்டில் நடைபெறும் மாற்றத்தினால், தொழில் வாழ்க்கையிலும், மண வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.
வருமானங்கள் இரட்டிப்பாக வாய்ப்பு கிடைப்பதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானத்தை கொண்டு வரும் சூழல் உண்டாகும்.
சொத்துக்களை வாங்கவும், விருப்பமான வாகனத்தை வாங்கவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
சூரியனின் இந்த பெயர்ச்சி மகர ராசியினரின் ஜாகத்தில் 11வது வீட்டில் மாற்றத்தினை கொண்டுவருவதுடன், நிதி ஆதாயத்தினை அதிகரிக்கின்றது.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களது கடன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வருமாம்.
தொழில் மிகப்பெரிய வளர்ச்சி, பெரிய ஒப்பந்தங்கள், அரசியல் செல்வாக்கு உள்ள நபரின் உதவி, அரசு வேலையினை எடுத்து செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |