தவறி கூட இந்த பொருட்களை சாலையில் பொறுக்காதீங்க - வீடு தேடி வரும் துரதிஷ்டம்
நாம் வழியில் செல்லும் போது ஏதாவது ஒரு பொருள் சாலையில் கிடந்தால் அந்த பொருட்களை நாம் நம்முடன் எடுத்து வருவது பல சாபத்தையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் சகுன சாஸ்திரங்களின்படியும் கீழ் கண்ட பொருட்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரப்படி கூறப்படுகின்றது.
மீறி நாம் இந்த பொருட்களை எடுத்து வந்தால் அவை எதிர்மறை ஆற்றல்களை மட்டுமல்லாமல் துரதிஷ்டத்தையும் சுமந்து வரலாம் என்று நம்பப்படுகிறது. அத்தகைய பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

| பணம் | நாம் செல்லும் வழியில் சாலையில் கிடக்கும் பணத்தை எடுப்பது அந்த பணத்தை இழந்தவர்களின் துரதிஷ்டத்தையும், கர்மாவையும் நம்முடன் இழுத்து வருவதாக நம்பப்படுகிறது. அதையும் மீறி தவிர்க்க முடியாத நிலையில் அந்த பணத்தை நீங்கள் எடுத்தால் கோவில் உண்டியலில் போட்டு விடுவது அல்லது பணமில்லாமல் கஷ்டபடுவர்களுக்கு கொடுத்து விடுவது எதிர்மறை நன்மை தரும் என கூறப்படுகின்றது. |
| கூர்மையானப் பொருட்கள் | சாலையில் கத்தி, கத்திரிக்கோல், ஆணி, ஊக்கு போன்ற கூர்மையான அல்லது இரும்பு பொருட்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் இரும்புப் பொருட்கள் சனியின் காரகப் பொருள் என்பதால் இவற்றின் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை தாக்கி குற்றவாளியாக உணர வைக்கும் என நம்பப்படுகின்றது. |
| பூஜைப் பொருட்கள் | சாலையில் யாரோ துக்கி வீசிய குங்குமம், விபூதி, மஞ்சள், உடைந்து போன சாமி சிலைகள் அல்லது படங்கள் போன்றவற்றை தொடவோ, எடுத்து வரவோ கூடாது. மாறாக இந்த பொருட்களை நீர் நிலைகளில் அல்லது கோவில்களில் எடுத்துச் சென்று வைத்துவிடலாம். |
| தனிப்பட்ட பொருட்கள் | சாலையில் கிடக்கும் தங்கம் உள்ளிட்ட நகைகள், உடைகள், கைக்குட்டை, தலைமுடி அல்லது பழைய செருப்புகள் போன்ற ஒருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய பொருட்களை எடுக்கக்கூடாது. இது மாந்திரீக ரீதியான சடங்குகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை நாம் எடுத்தால் அதற்குரிய பின்விளைவு நம்மை வந்து சேரும். |
| உணவுப் பொருட்கள் | சமைத்து சாலையில் வீசப்பட்ட உணவுகள், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை எடுத்தல் கூடாது. குறிப்பாக திருவிழாக்கள் அல்லது சடங்குகளுக்கு பிறகு சாலையில் வைக்கப்பட்டவற்றை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு சடங்கின் தோஷம் நீக்குவதற்கும் செய்யலாம். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |