கோலாகலமாக நடக்கபோகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் - நேரடியாக ஓடிடியில் ஒளிப்பரப்பும் இயக்குனர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து தனிமையில் வசித்து வருவது தெரிந்த ஒன்று தான்.
அடிக்கடி இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் வந்தாலும், படங்களில் பிஸியாக இருந்தாலும், இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டாலும் எப்பொழுது தான் உங்களுக்கு திருமணம் என கேட்காத ரசிகர்களே இல்லை.
அந்த அளவிற்கு கேட்டு விட்டனர். ஏற்கனவே இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், திருமணத்தை நிச்சயம் சொல்லிட்டு தான் செய்வோம் என கூறியிருந்தனர்.

திருப்பதியில் திருமணம் இல்லை
இந்த நிலையில், அண்மையில், இவர்கள் இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைப்பெற போகிறது என தகவல்கள் கசிந்தன. அதோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது.
இதனிடையே, பலரும் எதிர்பார்த்தது போல திருப்பதியில் தான் இவர்கள் திருமணம் நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள். ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு திருப்பதி நிர்வாகத்தில் அனுமதி கிடைக்கவில்லையாம்.
இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்த வேண்டாம் என்று இருவருமே இணைந்து முடிவெடுத்து இருக்கின்றன.

முறைப்படி நடக்கும்
இதனால், இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடக்க இருக்கிறது.
மேலும், பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது.
ஓடிடியில் வெளியீடு
தொடர்ந்து, விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.
அதன்படி இந்த திருமண வீடியோவை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்ல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
ஒரு வழியாக இவர்களின் திருமணம் முடிவுக்கு வருவதற்கு பலரும் இப்போது இருந்தே வாழ்த்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர்.