இவர் மட்டும் இல்லைன்னா... விக்னேஷ் இன்று தேடும் லிஸ்ட்டில் இருந்திருப்பார்... - பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி
இவர் மட்டும் இல்லைன்னா, விக்னேஷ் சிவன் இன்று நாம் தேடும் லிஸ்ட்டில் இருந்திருப்பார் என்று பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பறிபோன வாய்ப்பு
சமீபத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். ஏகே 62 கை நழுவிப் போனதையடுத்து, எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
பட்டென பேசிய பிரபல பத்திரிகையாளர்கள் இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து ஒரு தகவலை கூறியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து வெளியேறியதை பலர் அவமானப்பட்டுவிட்டார் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பப்ளிசிட்டிக்காக தன் மீது ஒரு அனுதாபம் வருவதற்காக அதனை பயன்படுத்துகிறார் என்று எனக்கு தெரிகிறது.
விக்னேஷ் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது பட்ட கஷ்டத்தைவிட இது அவ்வளவு பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது. நடிகை நயன்தாரா என்ற ஒருத்தர் இல்லையென்றால் இன்று விக்னேஷ் சிவன் நாம் தேடுகிற ஆளாகத்தான் இருந்திருப்பார் என்றார்.