ரம்ஜான் தினத்தில் நயன்தாரா கிச்சனை பாருங்க! வாயடைக்க வைத்த புகைப்படம்
ரமலான் பண்டிகைக்கு நடிகை நயன்தாரா வீட்டிற்கு நண்பர்கள் வீட்டின் மூலம் ஏகப்பட்ட பிரியாணி பார்சல் வந்துள்ள புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை கடந்த 22ம் தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சமூக வலைதளங்களிலும் ரமலான் பண்டிகைக்கு வாழ்த்தும், தங்களது இஸ்லாமிய நண்பர்களிடம் பிரியாணி கேட்டு கருத்து பதிவிட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இவர்களின் ரமலான் ஸ்பெஷல் என்னவெனில் பிரியாணி தான்.
பொதுவாக இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் வீட்டில் பிரியாணி செய்து அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என பகிர்ந்து கொடுப்பதுண்டு. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு வந்த பிரியாணிகளை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஆம் இயக்குனர் விக்னேஷ் தனது நண்பர்கள் கொடுத்த பிரியாணியை புகைப்படமாக வெளியிட்டு, தனது வாழ்த்துக்களையும் பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில்,"அன்பால தானா சேர்ந்த பிரியாணி... ரமலான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக்" என குறிப்பிட்டுள்ளார்.