பிறந்தநாளுக்கு ஜேர்மன் காரை பரிசாக கொடுத்த விக்கி- விலை என்ன தெரியுமா?
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்திருக்கும் காட்ஸ்லி பரிசு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
மலையாளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் தன்னுடைய பயணத்தை துவங்கியவர் தான் நடிகை நயன்தாரா.
தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரை செல்லமாக தமிழ் ரசிகர்கள் “ லேடி சூப்பர்ஸ்டார்..” எனவும் அழைக்கிறார்கள்.
சினிமாவில் இருக்கும் போதே நயன்தாரா-விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து வாடகை தாயை பயன்படுத்தி அழகான இரண்டு ஆண்குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன் சினிமாவை விட குடும்ப வாழக்கையில் அதிக ஈடுபாடுடன் இருக்கிறார்.
பிறந்த நாள் பரிசு
இந்த நிலையில் குடும்பத்துடன் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இதன்போது தன்னுடைய காதல் மனைவிக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் “ mercedes maybach ” எனப்படும் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த கார் பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரட் காராக இருந்தாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை வாங்குவது நயன்தாராவின் கனவு எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த காரை மினி ஏரோபிளைன் எனவும் அழைக்கலாம். ஏனெனின் ஆரம்ப விலையே ரூ.2.69 கோடி. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.3.4 கோடி ஆகும்.
சிறப்பம்சங்கள்
அத்துடன் 3982 சிசி வி8 இஞ்சின் உடன் வருகிறது. இது 557 ஹார்ஸ் பவர் திறன் கொண்டது. இந்த கார் நூறு கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 விநாடியில் தொட்டுவிடும் திறன் கொண்டது.
மேலும், பர்ஸ்ட் கிளாஸ் பிரைவேட் ஜெட்டில் எந்த அளவுக்கு வசதி இருக்குமோ அதே அளவுக்கு வசதி உடன் கூடிய சீட்டுகள் இந்த காரில் இருக்கிறது.
காரிலுள்ள சீட்டில் மசாஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் கதவு திறப்பது முதல் சீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்வது வரை என அனைத்துமே டிஜிட்டல் மூலம் செய்துகொள்ள முடியும்.
இந்த காரை வாங்கிய முதல் கோலிவுட் நடிகை என்ற பட்டமும் நயனையே சாரும். தன்னுடைய பிறந்த நாள் பரிசு தொடர்பாக நயன் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |