அரசு நிலம் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த... இயக்குனர் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன், பாண்டிச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் மதிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தற்போது நடிகை நயன்தாராவை மணத்துள்ள நிலையில் இவர்களுக்கு உயிர் உலகம் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவை ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் புதுச்சேரி சென்றிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அங்கு அம்மாநில சுற்றுலாத்துறை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான சீகல் ஹோட்டலை விலைக்கு கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பில் இவருக்கு எதிராக பல எதிர்ப்பான நெட்டிசன்கள் வந்தன. இதற்காக விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது நான் பாண்டிச்சேரிக்கு என்னுடைய லவ் இன்சூரன்ஸ் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்பதற்காக சென்றிருந்தேன்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தேன். அந்த சமயத்தில் என்னுடன் வந்தவர் அவருக்கு தேவையான சிலவற்றை பற்றி விசாரித்தார்.
அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, என்னை விமர்சித்து மீம்ஸ் போட்டுள்ளனர். அதை நான் ரசித்தேன் என விக்கி விளக்கம் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |