அவரை பலமுறை அழைத்தோம்! செஸ் விழாவில் கலந்து கொள்ளாத அறிவு முகத்திரையை கிழித்த விக்கி!
தமிழில் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்.
இவர் எழுதிய ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. இப்பாடல் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும்.
இந்த நிலையில், சமீபத்தில், செஸ் ஒலிம்பியாட் விழாவில் அறிவு கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பின் சர்ச்சை குறித்து இன்ஸ்டாவில் அறிவு பதிவு ஒன்றை வெளியிட்டார்., “கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான். அதில் எந்த வித சந்தேகமில்லை.
ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக் கூட யாரும் தரவில்லை.. 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன். என பதிவை வெளியிட்டு இருந்தார்.

உண்மையை உடைத்த விக்கி
இந்த ஒரு நிலையில், இந்த விழாவை இயக்கிய விக்னேஷ் சிவன் தெருக்குறள் அறிவு வராததற்கு காரணம் குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பலமுறை அழைத்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்றார்.
எனவே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு கூட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என்றே கூறினோம்.
ஆனால், அவரால் வர முடியவில்லை.
நானும் அறிவின் ரசிகன் தான். அவர் திறமைசாலி., ஆக அறிவு இடத்தில் நாங்கள் யாரையும் மாற்றாக பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்தியல் வேறுபாடும் இல்லை என விக்கி தெரிவித்து உள்ளார்.