விக்னேஷ் சிவனா இது? யாரும் பார்த்திராத புகைப்படம்... முதல் படத்தில் எப்படி இருக்கிறார் தெரியுமா?
கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் அதிக பேசு பொருளாக நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் மாறியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்து வருபவர்.
இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
விக்னேஷ் சிவன் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

வைரலாகும் புகைப்படம்
இந்த நிலையில் அவர்கள் பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதில் ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான சிவி திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அடையாளம் தெரியாத அளவு ஒல்லியாக இருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.