ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகர்... ஷாக்கான ரசிகர்கள்
பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தனது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
நடிகர் வித்யூத் ஜம்வால்
தமிழில் துப்பாக்கி படம் பெரிய ஹிட் ஆனது.ம் அப்படம் ஹிட் ஆனதற்கு ஹீரோ விஜய் ஒரு காரணம் என்றால், வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மற்றுமொரு முக்கிய காரணம்.
இவர் துப்பாக்கி படத்திற்கு முன்னரே பில்லா 2 படத்தில் நடித்தார். ஆனால், அதன் மூலம் அவர் பெரிதாக வெளியில் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு நண்பராக இவர் நடித்திருந்தார்.
இதையடுத்து அவர் கமாண்டோ 2, ஜங்க்லீ, யாரா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். வித்யூத் ஜாம்வால், தனது ஆடையற்ற புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அதன் கேப்ஷனை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகிவிட்டனர். அவர், கடந்த 17 வருடங்களாக வருடத்தில் 7 முதல் 10 நாட்களுக்கு இமயமலைக்கு சென்று வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வருடங்களில் தனக்கு கிடைத்த புகழ், சொகுசு என அனைத்தையும் துறந்து இயற்கையுடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆடையின்றி தண்ணீருக்குள் இறங்குவதையும், ஆற்றில் குளிப்பதையும், மரத்தடியில் சமைத்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.மேலும், “நான் யார் என்பதை அறிந்து கொள்வதன் முதல் படி இது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வித்யூத் ஜாம்வால் தனது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் பலர் அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |