கண்ணை கவரும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! விவாகரத்தா என கேட்ட ரசிகருக்கு பதிலடி!
தமிழ் சினிமாவில் நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இதையடுத்து, தனது உடல் எடையை குறைத்து பல படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட வித்யுலேகா, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். தனது கருத்துகளை, தனக்கு வரும் கேள்விகளுக்கான பதில்களை, விமர்சனங்களைத் தொடர்ந்து தன் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஹனிமூன் சென்ற போது பிகினி அணிந்து தொடை கவர்ச்சியை காட்டி பீச்சில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உங்களுக்கு எப்போ விவாகரத்து? என கேட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்த வித்யுலேகா ராமன், நீச்சல் உடை அணிந்தால் விவாகரத்தா? முதலில் உங்கள் எண்ணத்தை 1920களிலிருந்து 2021க்கு கொண்டு வாங்க. ஒரு பெண்ணின் உடை அவரின் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தால் அப்போ நல்ல உடைகள் அணியும் பெண்களின் வாழ்க்கை நல்லா இருக்கா? என நச் கேள்வியுடன் தெளிவான பதில் அளித்துள்ளார்.
மேலும், எந்தவித அச்சமும் இல்லாத ஒரு கணவர் எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். என்னைப் போலவே அவருக்கும் வித்தியாசமான நம்பிக்கைகள், நெறிமுறைகள் உள்ளன. இதற்கு பதில் சொல்லாமல் புறக்கணித்துவிடு என்றுதான் சொன்னார்.
ஆனால், என்னால் அப்படிக் கடந்து செல்ல முடியவில்லை. வெறுப்பைக் காட்டுவர்களின் குறுகலான, நச்சு மனப்பான்மையையோ, வாழ்க்கையைப் பற்றிய அதீதமான பிற்போக்குத்தனமான பார்வையையோ என்னால் மாற்ற முடியாது.
பெண்களையும் அவர்களுக்கு இருக்கும் தனித்துவத்தையும், பாலினப் பாகுபாட்டோடு, அடக்குமுறை பார்வையோடு, முற்றிலும் அவமதிக்கும் வகையில் நீங்கள் பார்க்கும் விதத்துக்கு எதிராக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் உங்களை எதிர்த்து நிற்பார்கள் என்று நம்புகிறேன். வாழு, வாழவிடு" என்று காரசாரமாக பதிலளித்துள்ளார்.
