பிறந்த நாளில் பிரியங்கா சொன்ன குட்நியூஸ் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
தொலைக்காட்சி ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய 34 வது பிறந்தநாளை கொண்டாடி தற்போது காணொளி வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பசவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

இவருடைய கலகலப்பான பேச்சுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி அந்த உறவு ஏதோ ஒரு முரண்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு தொழிலதிபர் வாசியை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. தற்போது இவருக்கு 34 வயதாகும் நிலையில் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

ரசிகர்களுக்கு குட் நியூஸ்
தனது 34வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பிரியங்கா கூறி உள்ளார்.
அந்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இதுவரை தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா தற்போது பாடகியாகவும் மாறி உள்ளாராம்.
தான் பாடிய முதல் பாடலை தன்னுடைய YouTube சேனலில் வெளியிட்டுள்ளாராம். மேலும் இந்தப் பாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ததாகவும், தனது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

"வயசாகுதே" எனும் இந்தப் பாடலுக்கு V2 Vijay Vicky இசையமைத்துள்ளார். மற்றும் பாடல் வரிகளை விக்னேஷ் கிருஷ்ணன் எழுதியுள்ளார்.என்று கூறி உள்ளார்.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் பாடகியாக புதிய பயணம் தொடங்கியுள்ள பிரியங்காவுக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |