Baakiyalakshmi: நீதிமன்றத்திலிருந்து பாக்கியாவிற்கு வந்த நோட்டீஸ்... குற்றவாளி கூண்டில் கோபி
பாக்கியலட்சுமி நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ள நிலையில், கோபி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வரும் பாக்கியாவின் வீட்டில் தற்போது கோபி ராதிகாவுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பாக்கியா உணவகத்தில் கோபி கெட்டுப்போன இறைச்சியைக் கலந்தது நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கின்றது. இதற்காக பாக்கியாவிற்கு நோட்டீஸ் வந்துள்ள நிலையில், கோபி தற்போது குற்றவாளி கூண்டில் இருக்கின்றார்.
கோபி தனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாக வீட்டில் கூறியுள்ள நிலையில், பாக்கியாவின் முடிவு என்ன என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |