கொட்டும் மழையில் நடுரோட்டில் படுத்த சிறுவன்.. அதிர்ந்து போன இணையவாசிகள்
கொட்டும் மழையில் நடுரோட்டில் படுத்திருக்கும் சிறுவனின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கின்றது. இந்த மழையில் சுமாராக 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நடுரோட்டில் நின்றுக் கொண்டிருக்கிறான்.
மழையில் நனையாமல் இருப்பதற்காக மஞ்சள் பொலித்தீன் உறையை அணிந்திருக்கிறான்.
அப்போது திடீரென என்ன நினைத்தான் என்று தெரியவில்லை தரையில் மல்லாக்க படுத்து கொள்கிறான்.
இந்த சிறுவன் இப்படி நடந்து கொள்வதை பயனர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். காட்சியை பார்த்த இணையவாசிகள், மழையில் சிறுவன் நடந்து கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன், “ இப்படி நனைவதால் சளி, இருமல் போன்ற பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.” என கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
Meanwhile in The Netherlands.. pic.twitter.com/QnSqDL4FXB
— Buitengebieden (@buitengebieden) June 8, 2022
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |