திருமணத்திலும் பிரச்சினையா? பிக்பாஸில் அம்பலமான கதை- கணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பிக்பாஸ் டாஸ்க்கிற்காக நடிகை விசித்திரா அவர் வாழ்க்கையில் நடந்த மோசமான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இரண்டு வீடு அடுத்தடுத்து வைல்ட் கார்ட் என்றி இப்படி ஏகப்பட்ட டுவிஸ்டுடன் நகர்ந்து வருகின்றது.
விளக்கம் கொடுத்த கணவர்
டாஸ்க்கிற்காக உண்மை உடைத்த விசித்திராவின் கணவர் சில உண்மைகளை ஓபனாக பகிர்ந்துள்ளார். அதில், “ விசித்திரா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போது எங்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கவில்லை.
இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் நான் அவருக்கு துணையாக இருந்தேன். பிரச்சினையின் போது விசித்திராவிற்கு தெரியாமல் அவரின் அறையை கூட காலி செய்ய சொன்னார்கள். நான் தான் என்னுடைய காரில் அழைத்து சென்றேன். எங்கள் திருமணம் நடந்தும் இது போன்ற மிரட்டல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது..
பிரதீப் பிரச்சினைக்கு கொடித் தூக்கிய தினேஷ் விசித்திரா விடயத்தில் மோசமாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஆறுதலாக இருக்க வேண்டாம் அதற்காக அவரை காயப்படுத்த முயற்சிக்கக் கூடாது..” என உருக்கமாக பேசியுள்ளார்.
உண்மை அறியாமல் ஒரு விடயத்திற்கு தங்களை ஈடுபடுத்தி கொள்ளக் கூடாது என்பதற்கு தினேஷ் தான் சரியான உதாரணம்.. என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் செய்தியை பார்த்து தினேஷின் மதிப்பு குறைந்து கொண்டே வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |