நெஞ்சு சளியை கரைக்கும் வெற்றிலை சாதம்- இலகுவாக செய்வது எப்படி?
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் வீட்டிலுள்ளவர்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிரச்சனை வர ஆரம்பித்து விடும்.
இந்த பிரச்சினை காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டாலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். இந்த சூழ்நிலையை தவிர்க்க நினைத்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் உணவுகளை சாப்பிட வேண்டும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட பொருட்களை தினமும் எடுத்து கொள்ளும் மழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.
அப்படியாயின், மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வெற்றிலை சாதம் தீர்வாக இருக்கிறது. அடிக்கடி இந்த சாதத்தை சாப்பிடாவிட்டாலும் வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் நெஞ்சில் இருக்கும் சளி தொல்லை குறையும்.
அந்த வகையில், மழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சினையை சரிச் செய்யும் வெற்றிலை சாதம் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* நெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி/வேர்க்கடலை - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெற்றிலை - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* முருங்கைப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* சாதம் - 2 கப்
வெற்றிலை சாதம் செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியது கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் முந்திரியை ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக வதங்க விடவும்.
வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து, மிதமான தீயில் கலந்து கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதங்க விட்டு உப்பு ,முருங்கைப் பொடி கொஞ்சமாக சேர்த்து வதக்கலாம்.
அதன் பின்னர் வடித்து வைத்திருக்கும் சாதத்தை 2 கப் அளவு அந்த கலவையில் கலந்து நன்கு கிளறி விடவும்.
இந்த ரெசிபியை சரியாக செய்தால் சுவையான வெற்றிலை சாதம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |