இட்லி பஞ்சு போல வரனுமா? அரிசி, உளுந்துடன் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்
இட்லி நன்கு பஞ்சு போன்று வருவதற்கு அரிசி மற்றும் உளுந்து இவற்றினை எவ்வாறு ஊற வைத்து அரைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி என்றாலே அனைவரது முகத்திற்கு முன்பு வருவது பஞ்சு போன்று இருக்கும் இட்லி தான். நான் நினைக்கும் விதத்தில் இட்லி சில தருணங்களில் வருவதில்லை.
அவ்வாறு பஞ்சு போன்று குஷ்பு இட்லி வருவதற்கு, சில டிப்ஸ்களை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை நாம் கடைபிடித்தால், கடைகளில் வீட்டிலேயே பஞ்சு போன்ற இட்லி தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி - 3 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1கப்
சாதம்/ அவல் - முக்கால் கப்
மாவு அரைக்க தண்ணீர் - 4 கப்
செய்முறை
நீங்கள் அரிசி அளக்கும் கப்பில் மூன்று கப் ரேஷன் புழுங்கல் அரிசியும், ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் உளுந்து எடுத்து ஒரே பாத்திரத்தில் மூன்றையும் போட்டு 4 அல்லது 5 முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நன்கு கொதிக்க வைத்த சுடுதண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். சுமார் 5 மணிநேரம் ஊற வைக்கவும்.
மாவு அரைக்கும் போது மிக்ஸியை பயன்படுத்திக் கொள்ளலாம். மிக்ஸியில் அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு அறைக்கவும்.
இந்த அரிசிக்கு முக்கால் கப் சாதம் அல்லது அவல் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் அரிசி அரைக்கும் போது இந்த அவல் அல்லது சாதம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கரைத்து மூடி வைக்கவும். காலையில் மாவு புளித்ததும் தேவையான அளவு மாவை எடுத்து இட்லி ஊற்றவும். பஞ்சு போன்ற இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |