72 வயதில் இப்படி பொறாமைபடும் அழகா? இந்த பெண்ணின் சீக்ரெட் இதுதானாம்
ஆடை வடிவமைப்பாளர் வேரா வாங் என்ற 72 வயது கொண்ட பெண் தற்போதும் இளமையான தோற்றத்துடன் இரு்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் இவ்வாறான இளமையான தோற்றத்திற்கு காரணம் என்ன என்பதையும் அவரே கூறியுள்ளார்.
இளமைக்கு காரணம் என்ன?
பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இளமையைக் காப்பதற்காக நான் தனியாக ஒன்றும் செய்ததே இல்லை" என்று கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பேஷன் ஷோக்களில் வேரா வாங் பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து அணிவித்துள்ளார்.
அவரது இளமைத் தோற்றம் மக்களை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். அதுவும் ஆரஞ்சு நிற கிராப் டாப் உடன், ஒரு வெள்ளை நிற ஷார்ட்ஸ் போட்டுகொண்டு அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு பிறகு அவருடைய இளமை குறித்த பேச்சுக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த வரவேற்பை அந்த பதிவிற்கு அவரே எதிர்பாக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். பார்ப்போர் அனைவரும் அவரது இளம் தோற்றத்தை புகழ்வது அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.

டென்ஷனை குறைக்க என்ன குடிக்கிறார்?
ஆனால் என்னுடைய சுய பரிசோதனையின்படி, தூக்கம் ஒரு முக்கிய காரணம். என்னை ஒரு நல்ல ஷேப்பில் இருக்கச்செய்வது தூக்கம்தான். பிறகு, என் மன அழுத்தத்தை, வேலை டென்ஷனை குறைக்க அவ்வபோது வோட்கா காக்டெய்ல் குடிக்கிறேன்.
அதன்மூலம் என் பிஸியான வேலை பளுவில் இருந்து ஒரு உடனடி மாற்றம் என் தனிப்பட்ட வாழ்வுக்கு கிடைக்கிறது. அதனை தாண்டி ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்ததை அவர்களுக்கு தெரிந்த வழியில் செய்தாலே போதும். வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.
இளமை தோற்றமே என்பதெல்லாம் இப்போது ஓல்ட் ஃபேஷன் ஆகிவிட்டது. உங்களுக்கு எப்படி வாழ தோன்றுகிறதோ அப்படியே வாழுங்கள்." என்று கூறினார்.

தோழியை கொன்றுவிட்டதாக கூறும் ரசிகர்கள்! யாஷிகா எடுத்த அதிரடி முடிவு