தோழியை கொன்றுவிட்டதாக சாட்டப்படும் குற்றம்! யாஷிகா எடுத்த அதிரடி முடிவு
நடிகை யாஷிகா ஆனந்த் தோழி விபத்தில் பலியானதையடுத்து தற்போது இரண்டு முடிவுகளை அதிரடியாக எடுத்துள்ளார்.
மிகவும் குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை யாஷிகா பஞ்சாப் மாடல் அழகி ஆவார்.
இவரின் கவர்ச்சியான நடிப்பிற்கே ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
விபத்தில் சிக்கிய யாஷிகா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் யாஷிகா படுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் யாஷிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், யாஷிகாவும் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார்.

யாஷிகாவின் புல்லட் பைக்
விபத்திலிருந்து மீண்டு வந்தாலும் யாஷிகா தோழியை நினைத்து கவலையுடனே காணப்படுகின்றார். இந்நிலையில் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றார்.
ரசிகர் ஒருவர் புல்லட் பைக் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பின போது, அதற்கு யாஷிகா “அந்த பைக் எனது வீட்டில் யாஷிகா, இருக்கிறது. என்னுடைய அண்ணன் இப்போது அதை பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, அனைவரும் ஒரு முக்கியமான தகவல், இனி நான் காரோ அல்லது பைக்கோ ஓட்டப் போவது இல்லை என முடிவெடுத்து உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி முடிவு ஏன்?
எதற்காக இந்த அதிர்ச்சி முடிவு என்று ரசிகர் கேட்டதற்கு, “நான்தான் என் தோழியை கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இரவில் வீட்டிற்கு வராத பாலா! விவாகரத்து காரணம் லீக்