சுக்கிரனால் ராஜ யோகம் பெறும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசியினரின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி காலை 7.02 மணிக்கு நிகழவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில பெண் ராசியினர் அமோகமான சாதக பலன்களை பெறப்போகின்றனர்.
அப்படி செல்வம், காதல் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் முழுமையான ஆசீர்வாதத்தால் வாழ்வில் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பலன்பகள் வாழ்வில் பல்வேறு நல்ல திருப்பங்களை ஏற்படுத்தவுள்ளது.
இந்த ராசி பெண்களுக்கும் உயர் பதவிகளில் அமரும் யோகம் காணப்படுகின்றது. பல்வேறு வழிகளிலும் இவர்கள் வருமானம் பெறுவார்கள்.
புதிய தொழில் முயற்சிகளில் வெற்றியடைவதற்காக வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் மனவலிமை அதிகரிக்கும்.
இவர்கள் அதிக செல்வ செழிப்பை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழும் யோகத்தை இந்த ஆண்டில் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு சுக்கிர பெயர்ச்சி பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
இந்த ராசி பெண்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் ராஜ யோகம் இந்த காலகட்டத்தில் உண்டாகும்.
இவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விடயங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்களுக்கு பேரதிஷ்டம் காத்திருக்கின்றது. அதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பல வழிகளில் வருமானம் அதிகரிக்கலாம். வேலை முயற்சிகளில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு கோடீஸ்வர ஆணுடன் திருமணமாகும் யோகம் காணப்படுகின்றது. காதல் உறவில் இருப்போருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |