சுக்கிரன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம்... அந்த ஐந்து ராசியினர் யார் யார்?
சுக்கிரன் பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் கோடீஸ்வர யோகத்தை அடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சரியான நிலையில் அமைந்திருந்தால், எந்தவொரு பற்றாக்குறையும் ஏற்படாதாம். அதிலும் நிதி பிரச்சனை என்பது கிடையாது.
இந்நிலையில் இன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளார். மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவதுடன், அஸ்வினி நட்சத்திரத்திலும் நுழைந்துள்ளார்.
இதனால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படுகின்றது. தற்போது எந்தெந்த ராசியினருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மீனம்
மீன ராசியினர் இந்த காலக்கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதுடன், நிலுவையில் அனைத்து பணிகளும் முடிவிற்கு வருகின்றது. நிதி நிலை நன்றாக இருப்பதுடன், தொழிலில் புதிய வாய்ப்புகளும் வரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் இத்தருணத்தில் நிலவுகின்றது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் நன்மை அடைவதுடன், வருமானமும் அதிகரிக்கின்றது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதுடன், வெளிநாடுகளில் இருந்தும் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி நிலவுமாம்.

கடகம்
கடக ராசியினர் இந்த சுக்கிரன் பெயர்ச்சியில் தொழிலில் அற்புதமான பலனை அடைவார்கள். பதவி உயர்வு, பொருளாதார ரீதியான உதவிகள் கிடைப்பதுடன், புதிய திட்டங்களை தீட்டினால் வெற்றியும் கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், இந்த நேரத்தில் நன்மை கிடைப்பதுடன், ஆளுமை மேம்படுகின்றது. பொருளாதார ரீதியில் நல்லநிலை காணப்படும். அனைத்து நிதி பிரச்சனைகளும் இந்த நேரத்தில் நீங்கிவிடுவதுடன், தொழிலில் புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த நேரம் அற்புதமான நேரமாக காணப்படுகின்றது. சுக்கிரன் பெயர்ச்சியால் எல்லாம் அற்புதமாக அமைவதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கும். நிதி நிலையும் மேம்படுவதுடன், தன்னம்பிக்கையும் இந்நேரத்தில் அதிகரிக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |