சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை!
பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளானது மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்டுகின்றது.
அந்த வகையில், உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும், அசுரர்களின் குருவான சுக்கிரன் பெயர்ச்சிக்கு சாஸ்திரங்களின் அடிப்படையில் மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிப்ரவரி 11ஆம் திகதியன்று சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, சுக்கிரன் சதய நட்சத்திரத்திற்கு நகர்ந்துள்ளார்.
அதன் ஆதிக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், சுக்கிரனின் சதய நட்சத்திர மாற்றமானது குறிபிட்ட சில ராசியினருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது. அப்படி எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சுக்கிரனின் குறித்த சதய நட்சத்திர பெயர்ச்சியானது,கடக ராசியினருக்கு பொருளாதார ரீதியில் பாரிய சரிவை ஏற்படுத்தப்போகின்றது. இவர்கள் நிதி விடயத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும், திருமண வாழ்க்கையிலும் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். பணியத்தில் வாய் தர்க்கங்கள் ஏற்படுவதற்காக சூழ்நிலை உருவாகும்.
ஆரோக்கிய விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை எதிர்ப்பார்த்து இருப்பவலர்கள் ஏமாற்றததையே சந்திக்க நேரிடும். பணவரவு திருப்திகரமாக இருக்காது.
கன்னி

சதய நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் பாதக பலன்களை அனுபவிக்க கூடும்.
இவர்களின் எதிர்ப்பாத்த விடயத்தில் வெற்றியடைய முடியாத நிலை உருவாகும். பயணங்களின் போது விபத்துக்கள் நேரும் அபயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் நிதியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். பல வழிகளிலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை அதிகரிக்கும். பணத்தை கையாளும் போதும் மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
மீனம்

மீன ராசியினருக்கு சுக்கிரனின் சதய நட்சத்திர மாற்றமானது எதிர்பாரத வகையில் பல துன்பங்களை ஏற்படும்தும் ஒரு மோசமான காலகட்டமாகவே அமையப்போகின்றது.
தொழில் ரீதியில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை பார்ப்பவர்கள் தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ளவே போராட வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழல் உருவாகும்.
குறிப்பாக மீன ராசியினர் இந்த காலகட்டத்தில், வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. பணத்தை செலவு செய்யும் போதும் அதிக கவனம் தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |