என்றும் இல்லாத அதிர்ஷ்டத்தை கொடுக்கும் சனி பகவான்.. 2026-ல் உங்களுக்கும் கிடைக்குமா?
ஜோதிட சாஸ்திரத்தில் கூறியது போன்று குறிப்பிட்ட இடைவேளையில் கிரகங்கள் தன்னுடைய ராசியை மாற்றும். அப்படி மாறும் பொழுது 12 ராசியினரின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் நடக்கும்.
சிலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமையாகவும் நடக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 2026ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் பயணம் செய்யப்போகிறார். அதே சமயத்தில் சுக்கிரனும் தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.
இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சி எதிர்வரும் ஜனவரி 13, 2026 அன்று அதிகாலை 4:02 மணிக்கு நடக்கிறது.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரி 6 வரை தொடர்கிறது. பலரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் சனி பகவான் புத்தாண்டில் என்ன மாதிரியான பலன்களை தரப்போகிறார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சனி பெயர்ச்சியால் கிடைக்கும் அதிர்ஷ்டம்

| மேஷ ராசியினரா நீங்க? | சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்த வருடம் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களுக்கு சார்பாக இருப்பார்கள். லாபம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே கிடைக்கும். வலுவான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. |
| துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமா? | சுக்கிர பெயர்ச்சி, சனியுடன் பெயர்ச்சியடையும் பொழுது துலாம் ராசிக்கு தற்போது இருக்கும் கஷ்டங்கள் மறையும். இவர்களுடைய பிரச்சினைகளை சரியாக சமாளிப்பார்கள். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் கிடைக்கும். ஆடம்பர வாழ்கையை வேண்டும் என்ற போராட்டம் இருக்கா? அப்போது உங்களுக்கு சுக்கிரன் நினைத்ததை விட அதிகமாக தருவார். உடல் நல பிரச்சினைகள் கூட சரியாகி விடும். |
| மகர ராசியினரா நீங்க? | மகர ராசியினருக்கு சிறப்பான பலன்கள் அதிகமாக கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் செழிப்பு இவர்களின் கண்களில் தெரியும். புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்பு உங்களுடைய வீட்டிற்கே வரும். பல துறைகளில் சாதனைகள் செய்வீர்கள். வேலையில் முயற்சி செய்யுங்கள், உங்களுடைய கஷ்டங்களுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).