அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 30, 2026 03:29 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், திருமணம், செல்வம், செழிப்பு மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படும் சுக்கிரனின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரு ராசிகளுக்கும் அதிபதியாக உள்ளார். சுக்கிரன் பொதுவாக ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் பயணித்து, பின்னர் அடுத்த ராசிக்கு இடம்பெயர்வார்.

அந்த வகையில் தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 03ஆம் தேதி சுக்கிரன் வக்ர நிலையில் தனது பயணத்தைத் தொடங்க உள்ளார்.

இந்த வக்ரப் பயணம் நவம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரனின் இந்த வக்ரப் பயணம் காதல், திருமணம், உறவுகள், பணவரவு, பொருளாதார நிலை மற்றும் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

நாளை முதல் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

நாளை முதல் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

எனவே ஜோதிட கணிப்புகளின் பிரகாரம் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் எவ்வாறான சாதக, பாதக பலன்களை கொடுக்கப்போகின்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

12 ராசிகளுக்கான சிறப்பு பலன்கள் 

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

மேஷம்

மேஷ ராசியின் 7-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், உறவுகள் மற்றும் கூட்டு தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.தொழில், திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய காலம் இது. அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 6-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், ஆரோக்கியம் மற்றும் தினசரி வழக்கத்தில் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள்.ஆரோக்கியம் மற்றும் எதிரிகளின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியின் 5-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், காதல் மற்றும் குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த முயற்ச்சி எடுப்பீர்கள்.

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

கடகம்

கடக ராசியின் 4-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதைத் தள்ளிப்போடுவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியின் 3-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், தைரியம் மற்றும் பேச்சில் மாற்றங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் சண்டையைத் தவிர்க்க வேண்டும். ஆவணங்களில் கையெழுத்திடும்போது கூடுதல் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசியின் 2-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், நிதி மற்றும் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பப் பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்க வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், இது சுயபரிசோதனைக்கான காலமாக இருக்கும்.ஆளுமை மற்றும் உறவுகளை மேம்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தற்பெருமையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். தொலைதூரப் பயணங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

தனுசு

தனுசு ராசியின் 11-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், வருமான ஆதாரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். பழைய நண்பர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளது. அதிக பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகளைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம்.

மகரம்

மகர ராசியின் 10-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், தொழில் மற்றும் வேலையில் புதிய சவால்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். வேலை மாற்றம் குறித்து விவேகத்துடன் பரிசீலிக்கலாம்.

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ! | Venus Retrograde In Libra Effects On 12 Zodiacs

விசுவாசத்தின் மறு உருவமாகவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

விசுவாசத்தின் மறு உருவமாகவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

கும்பம்

கும்ப ராசியின் 9-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். பயணங்களின்போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திலும் அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்

மீன ராசியின் 8-ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், ஆரோக்கியம் மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயம், இழப்புகள் தொடர்பாக கவனம் தேவை. மாமியாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆபத்தான முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US