அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது - தனது சினிமா ஆர்வம் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

சினிமா ஆர்வம் குறித்து ஜேசன் சஞ்சய்
குறித்த பேட்டியில் அவர் பேசுகையில், தனக்குள் சினிமா மீதான ஆர்வம் எப்படி உருவானது என்பதைப் பகிர்ந்த அவர், “எனக்கு 18, 19 வயது இருக்கும். அப்போதே கதை சொல்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஒருமுறை நடந்த ஒரு நிஜ சம்பவத்தை என் நண்பர்களிடம் விவரித்தேன்.
நான் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் அந்தச் சம்பவம் நடக்கும் இடத்திலேயே இருப்பது போன்ற உணர்வைப் பெற்றதாக கூறினார்கள். அந்த அனுபவத்துக்குப் பிறகு, என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் கற்பனை கலந்து எழுதத் தொடங்கினேன்.

இப்படித்தான் எனக்குள் சினிமா மீதான ஆர்வம் உருவானது. எவ்வளவு காலம்தான் கதைகளை பேப்பர், பேனாவில் எழுதிக்கொண்டிருப்பது என யோசித்து, அவற்றை குறும்படமாக உருவாக்கத் தொடங்கினேன்.
அங்கிருந்துதான் என் சினிமா பயணம் தொடங்கியது. என்னுடைய ஆர்வம் முழுவதும் சினிமாவைச் சுற்றியே இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதைத் தீவிரமாகப் பின்தொடர ஆரம்பித்தேன்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |