Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா?
வீட்டிலோ அல்லது வெளியிடங்களிலோ ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால், அருகில் இருப்பவர்களும் பதற்றமடைவது இயல்புதான்.
ஆனால், அந்த நேரத்தில் பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்பட்டு, உரிய முதலுதவியை வழங்குவதுடன், நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம் எனவும் இல்லாவிடில் உயிராபத்து ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைபின் முக்கிய அறிகுறிகள்
குறிப்பாக, நெஞ்சு வலியுடன் சில குறிப்பிட்ட அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால், அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
மார்பின் நடுப்பகுதியில் அழுத்தம் அல்லது இறுக்கம் போன்ற உணர்வு ஏற்படுதல், அந்த வலி தோள், கை, தாடை அல்லது வயிற்றின் மேற்பகுதிக்கு பரவுதல், அதிகமாக வியர்த்தல், மூச்சுவிடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகரித்தது போன்ற உணர்வு, வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகியவை அவற்றில் அடங்கும்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அதற்கு முன்னர் முதலுதவியாக எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் அல்லது அவசர மருத்துவ நிபுணரின் ஆலோசனை கிடைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த மருந்துகள் மாரடைப்பை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் அல்ல.

அவசர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை நிலைமையை சமாளிக்க உதவும் வகையிலேயே சில மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மருந்து எடுத்திருந்தாலும், நோயாளியை தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் முக்கியம்.
ஒருவேளை உங்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பே இல்லை, ஆனாலும் மாத்திரையை சாப்பிட்டு விட்டீர்கள் என்றாலும் பிரச்சனை இல்லை. பெரியளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது.
அப்படி மாரடைப்பு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உயிரை காப்பாற்ற முதலுதவியாக எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய மாத்திரகள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

உயிரைக் காக்க உதவும் 3 மாத்திரைகள்
இதய நோய் தொடர்பான அவசரநிலைகளில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம்.
Aspirin 325 mg – முதல் மாத்திரை. சில அவசரநிலைகளில் இதை மென்று உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
Clopidogrel 150 mg – இரண்டாவது மருந்து. பரிந்துரைக்கப்பட்ட அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
Atorvastatin 80 mg – கொழுப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து. இந்த மருந்துகளை அறிகுறிகள் தென்பட்டவுடன் தன்னிச்சையாக உட்கொள்வதைவிட, இதய அவசரநிலைகளில் என்ன செய்ய வேண்டும், எந்த மருந்தை எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசனை பெறுவது முக்கியம்.

இதய நோய் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை எப்போதும் உடன் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் மட்டுமல்லாமல், வெளியே செல்லும்போதும் அவற்றை எடுத்துச் செல்லலாம். மேலும், இதய நோய் அபாயத்தை மதிப்பிடுவதற்காக மருத்துவரின் ஆலோசனைப்படி வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.
இதய நோய் இல்லாதவர்களும் இது குறித்து அறிந்திருப்பதும் இந்த மருந்துகளை கைவசம் வைத்திருப்பதும் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற சரியான நேரத்தில் துணைப்புரியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |