சிம்ம ராசியில் கேது-சுக்கிரன்... ஜுலையில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாம்
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது மற்றும் சுக்கிரனால் ஜுலை மாதத்தில் அதிர்ஷ்டத்தினை சந்திக்கும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.
கேது - சுக்கிரன் சேர்க்கை
பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஜோதிடத்தில் நிகழ் கிரகமாக கருதப்படும் கேது, மற்ற கிரகங்களைப் போன்று நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர்.
கேது சிம்ம ராசியலில் தற்போது பயணித்து வரும் நிலையில், சுக்கிரனும் சிம்ம ராசிக்குள் நுழைய இருக்கின்றார். அதாவது அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் இவறறிற்கு அதிபதியாவார்.
அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் கடக ராசியில் தற்போது பயணித்து வரும் நிலையில், ஜுலை 4ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகின்றார். இதில் கேது இருப்பதால் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்கின்றது.
இந்த சேர்க்கை ஜுலை 30ம் தேதி வரை நீடிக்கும் நிலையில், சில ராசியினருக்கு இவை பொற்காலமாக திகழ்கின்றது. அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4வது வீட்டில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளதால், புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். செல்வம் பெருகுவதுடன் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கும்.
பணியிடத்தில் இலக்கை அடைவதுடன், நிதி சார்ந்த விடயங்கள் சாதகமாக இருப்பதுடன், சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் எதிர்பாராத லாபத்தினை பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியில் 11வது வீட்டில் நடைபெறும் இந்த சேர்க்கையினால், நிதி நிலைமை மேம்படுவதுடன், நீண்ட காலம் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதிய வருமான வழிகள் உருவாவதுடன், புதிய சாதனையை படைக்கவும் செய்கின்றீர்கள். குடும்பத்தில் முழு ஆதரவு கிடைப்பதுடன், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கிய சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவையாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் 10வது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ள நிலையில், தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
அலுவலகத்தில் பாராட்டை பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றியாக முடியும். மன அமைதி கிடைக்கும், வாழ்க்கையின் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |