பண தொட்டியில் தாலாட்டும் சுக்கிரன் பெயர்ச்சி.. பரிவர்த்தனை யோகத்தால் அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜோதிட சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் நடக்கும் பெயர்ச்சிகள் ராசிகளுக்கு ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கும்.
அந்த வகையில், சுக்கிரன்–புதன் பெயர்ச்சி இடம்பெறவுள்ளது. இந்த பெயர்ச்சியின் விளைவாக பரிவர்த்தனை யோகம் உருவாகி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் யோகத்தை கொட்டிக் கொடுக்கப்போகிறது.
ஆண்டு தோறும் ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த பெயர்ச்சி கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கன்னி ராசியில் நிகழ்ந்துள்ளது. இந்த பெயர்ச்சி எதிர்வரும் நவம்பர் 2-ம் தேதி வரை அதே ராசியில் இருக்கும்.
கன்னி ராசி சுக்கிரன் பெயர்ச்சியடைவதால் சில சிக்கல்களும் இருக்கும், அதே சமயம், கன்னி ராசிக்கு அதிபதியான புதன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த பெயர்ச்சிகளால் உருவாகவுள்ள பரிவர்த்தனை யோகம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு மாத்திரம் அதிர்ஷ்டம், செல்வம், தொழில் மற்றும் வாழ்க்கை வாய்ப்புகளை குவிக்கப்போகிறார். அப்படியாயின், இது போன்ற பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பரிவர்த்தனை யோகம்
மகரம் | மகர ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். ஒன்பதாவது வீட்டில் உருவாகியிருக்கும் இந்த பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தை நிலைநாட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் அதிகமாக தேடி வரும். வருமானம் மற்றும் தொழில் விடயங்களில் அதிகமான வருவாய் இருக்கும். சிக்கல்கள் குறைந்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம். மற்றவர்களிடம் மதிப்பு மரியாதை அதிகமாகும். |
மிதுனம் | சுக்கிரன் மிதுனம் ராசியில் பத்தாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இதனால் புதிய வாகனம், வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பல நன்மைகள் உங்களை தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் தனி அந்தஸ்து கிடைக்கும். |
கும்பம் | சுக்கிரன் இரண்டாவது வீட்டில் அமர்ந்து பேச்வு திறமையால் நல்ல முன்னேற்றம் காண செய்வார். வசதிகள் மற்றும் வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். நிறைய பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிகம் சம்பளம் வாங்கும் நபர்களாக இருந்தால் புதிய தொழில் ஆரம்பிக்கும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்களை தேடி வரும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).