தீபாவளியன்று அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் மகாலட்சுமி - அந்த யோகம் யாருக்கு?
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தில் சில பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கும் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கவுள்ளதாக ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது.
எதிர்வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமையன்று கிரகங்களின் தளபதியாக பார்க்கப்படும் செவ்வாய் பகவான்- சந்திரன் இருவரும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது, இணையும் பொழுது மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டத்தை வீட்டிற்கே கொண்டு வந்து தரும்.
சக்தி வாய்ந்த இந்த யோகமானது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது என ஜோதிடம் கூறுகிறது.
அப்படியாயின், தீபாவளியன்று செல்வத்தை கொட்டிக் கொடுக்கும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தீபாவளி தினத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால் மகாலட்சுமி பெறவுள்ளனர். இதன் விளைவாக அவர்களுக்கு உள்ள ஆளுமை திறன் அதிகரிக்கும். அத்துடன் தன்னம்பிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவிற்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினையால் நிறைவேறாமல் இருந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வீடு, வாகனம் போன்ற ஆடம்பரமான பொருட்களை வாங்கும் யோகம் உருவாகியுள்ளது. சுமாராக 100 வருடங்களுக்கு பின் இந்த யோகம் உருவாகியுள்ளது என ஜோதிடம் கூறுகிறது. |
கடகம் | கடக ராசியில் நான்காம் வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. ஜாதகத்தில் நான்காவது வீடு என்றால் வாகனம், உறவு, பொன், பொருள், வீடு உள்ளிட்ட அனைத்தும் கிடைப்பதற்காக வாய்ப்பு உருவாகியுள்ளது. சொத்துக்கள் தொடர்பான வருமானங்கள் அதிகமாகும். பழைய கடன்கள் இல்லாமல் போகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். வேலையில்லாமல் இருந்த கஷ்டங்கள் இனி இருக்காது. புதிய வேலைகள் மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. |
மகரம் | மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் ராஜயோகம் உருவாகும். தீபாவளிக்குப் பின்னர் வேலை மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. தொழிலில் லாபம் அதிகமாகும். முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சமூகத்தில் நல்ல மதிப்பு உருவாகும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு வாங்குவீர்கள். வங்கி இருப்பு மெதுமெதுவாக அதிகரிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).