துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகராகவும் இவர் விளங்குகிறார்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.

சுக்கிரனின் இந்த நிலை மாற்றம் தொழில், நிதிநிலை, திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இதன் தாக்கம் காணப்படும் அப்படி, சில ராசிக்காரர்களுக்கு இது சவால்களை ஏற்படுத்தக்கூடும். மற்ற சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் சாதகமான பலன்களையும் வழங்கலாம்.
சுமார் 10 நாட்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் சுக்கிரன், அக்டோபர் 29ஆம் தேதி துலாம் ராசியில் மீண்டும் உதயமாகி வலுப்பெறவுள்ளார்.
இந்நிலையில், சுக்கிரனின் அஸ்தமனத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான பலன்களையும் நிதி ஆதாயங்களையும் அனுபவிக்கப்போகின்றார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் 2ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாவதால், புதிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். புதிய வருமான வழிகள் உருவாகுவதுடன், நிலுவையில் உள்ள பணமும் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது.
மேஷம்

மேஷ ராசியின் 7ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாவதால், தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை மாற விரும்புபவர்கள் இக்காலத்தில் முயற்சி செய்தால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். இருப்பினும், நிதி முடிவுகளை அவசரப்படாமல் கவனமாக எடுப்பது அவசியம்.
கடகம்

கடக ராசியின் 4ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாவதால், நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் உருவாகலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட கால உழைப்புக்கான பலன்களும் கிடைக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 9ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாவதால், தொழில் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
பணிபுரிபவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அநாவசிய செலவுகளில் மாத்திரம் சற்று கவனம் செலுத்துவது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |