தவறு செய்துவிட்டீர்களா? இனி Brain-ன் இந்த ரகசியத்தை நினைவில் கொள்ளுங்கள்!
வாழ்க்கையில் தவறுகள் நடப்பது இயல்பானது. ஒரு தவறு நடந்தவுடன் பயம், பதற்றம், குற்ற உணர்வு ஆகியவற்றால் நம்மை நாமே வருத்திக்கொள்வதைவிட, அந்தத் தவறிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சிந்திப்பது மிகவும் முக்கியத்தும் பெறுகின்றது.
வாழ்க்கையில் நாம் செய்யும் ஒரு தவறு போதும், மனதுக்குள் பயம், பதற்றம், குற்ற உணர்வு எனப் பல கேள்விகள் எழத் தொடங்கிவிடும். “ஏன் இப்படிச் செய்தேன்? இனி என்ன நடக்கப் போகிறது?” என்று நம்மையே நாமே குறை சொல்லிக்கொள்வோம்.

ஆனால், ஒரு நிமிடம் இந்த வகையில் சிந்தித்துப் பாருங்கள்… தவறு செய்துவிட்டோம் என்பதற்காக நாம் தோற்றுவிட்டோமா? அல்லது, இன்னும் சிறப்பாக வளர்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோமா? ஏனெனில், தவறுகள் நம்மை வீழ்த்துவதற்காக அல்ல மாறாக, அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் நம்முடைய அடுத்த வெற்றியைத் தீர்மானிக்கிறது.
அப்படியானால், ஒரு தவறைத் தோல்வியாகப் பார்க்காமல், வளர்ச்சிக்கான படியாக மாற்றுவது எப்படி? என்பது பற்றியும் தவறு செய்யும் போது மூளையில் சடுதியாக நடக்கும் மாற்றங்கள் பற்றியும் விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |