வெங்கடேஷ் பட்டின் அசத்தலான சுவையில் பொடி இல்லாத சாம்பார்! இப்படி செய்து பாருங்க
புதிதாக வெங்கடேஷ் பட்டின் ரெசிபியில் சாம்பாருக்கு பொடி இல்லாமல் மிகவும் அருமையான சுவையில் சாம்பார் எப்படி வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு 1 கப்
- 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 4 வத்தல்
- 1 ஸ்பூன் கடுகு
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் பெருங்காயம்
- 3 கத்திரிக்காய்
- 4 வெண்டைக்காய்
- அரை கப் சர்க்கரைவள்ளி கிழங்கு
- 50 கிராம் புளி
- அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
- 1 ஸ்பூன் வெல்லம்
செய்யும் முறை
துவரம் பருப்பை, தண்ணீர் சேர்த்து 4 விசிலின் பின்னர் எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து 4 வத்தலை சேர்க்கவும். கடுகு சேர்க்கவும். பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்க்கவும்.
தொடர்ந்து கத்திரிக்காய், வெண்டைக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து காய்கறியை வேக வைக்கவும். வெந்ததும், புளி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து வேக வைத்த பருப்பை சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். இப்படி செய்த பின் நன்றாக கொதித்து வரும் சமணயத்தில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து கிண்டினால் சுவையான சாம்பார் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |